தஞ்சையில் இருந்து , சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு , ஏதாவது பொய் சொல்லி , “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது) அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் அனுப்பும்போது , அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல் , யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம். ஒவ்வொரு முறையும் , “ மை டியர் சன்.. ( my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம். ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன். மை டியர் சன் ( my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது. ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள். அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது. அந்த மணியார்ட...
உலகின் மிகக் குறுகிய நதி எது ? ஹுவாலை ( Hualai) நதி இந்த அற்புதமான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ளது. இதன் அகலம் 10-14 சென்டி மீட்டர் சில இடங்களில் 50 சென்டி மீட்டர் அகலம் வரை மட்டுமே உள்ளது. இருப்பினும் , இது 17 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 4km அகலம் உடைய ஆறயே பட்டா போடும் இந்த ஊர்ல 4cm அகலம் இருக்குற ஆறை பாத்துகாத்து வெச்சிருக்கானுங்க
Comments
Post a Comment